Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மேற்கு வங்கத்தில் ராணுவம் குவிப்பு: மம்தா உள்ளிருப்பு போராட்டம்!

மேற்கு வங்கத்தில் ராணுவம் குவிப்பு: மம்தா உள்ளிருப்பு போராட்டம்!


Caston| Last Updated: வெள்ளி, 2 டிசம்பர் 2016 (16:30 IST)
மேற்கு வங்க மாநிலத்தின் தலைமை செயலகம் மற்றும் அம்மாநிலத்தின் சில மாவட்டங்களிலும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமை செயலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

 
 
பிரதமர் மோடி ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததில் இருந்து அதனை கடுமையாக எதிர்த்து வருகிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா. இதனை எதிர்த்து போராட்டம் நடத்த அவர் எதிர் கட்சிகளை ஒன்று திரட்டி வருகிறார்.
 
இந்த சூழலில் மேற்கு வங்கத்தின் தலைமை செயலகத்திலும், அம்மாநிலத்தின் சில மாவட்டங்களிலும் ராணுவம் குவிக்கப்பட்டு வருவதாக மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். உடனடியாக ராணுவம் திரும்ப பெற வேண்டும், இல்லையெனில் தலைமை செயலகத்தில் இருந்து வெளியே வர மாட்டேன் என உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

 
ஆனால் இது ஆண்டுதோறும் நடத்தப்படும் வாகன சோதனைக்கு தான் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது எனவும் இது வழக்கமான நிகழ்வு தான் என ராணுவ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :