வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 29 ஏப்ரல் 2014 (14:16 IST)

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு பெண்களிடம் தனி மரியாதை - விஜயசாந்தி

நடிகை விஜயசாந்தி மேடக் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தபோது செய்தியாளர்களிடம் தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெண்களிடம் தனி மரியாதை இருப்பதாக கூறினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
 
தனி தெலங்கானா உருவாவதற்கு காங்கிரஸ்தான் காரணம். இது மக்களுக்கு நன்றாக தெரியும். இங்கு பிரச்சாரம் செய்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் முதன் முதலில் அமைக்கப்படும் அரசுக்கு ஒரு பெண்தான் முதலமைச்சர் ஆவார் என்று உறுதியாகக் கூறியிருக்கிறார்.
 
அவரது உறுதி மொழி காரணமாக தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு பெண்களிடம் தனி மரியாதை ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸ் செல்வாக்கு பல மடங்கு அதிகரித்துள்ளது. தெலங்கானா பிற்படுத்தப்பட்ட பகுதி என்பதால்தான் அதன் வளர்ச்சிக்காக, தனி மாநிலம் கேட்டு போராடினோம். அதற்கு மரியாதை அளித்து மத்திய காங்கிரஸ் அரசு தனி தெலங்கானாவை உருவாக்கி இருக்கிறது.
 
சந்திரசேகர ராவ் இலவச திட்டங்களை அறிவித்து வாக்குகளை பெற முயற்சி செய்கிறார். ஆனால் ராகுல் காந்தி தெலங்கானாவை தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றுவேன் என்று உறுதி அளித்துள்ளார். தனி தெலங்கானா அறிவித்தால் கட்சியை கலைத்து விட்டு காங்கிரசில் சேருவேன் என்று சந்திரசேகர ராவ் முன்பு கூறினார். அந்த அறிவிப்பு வெளியானதும் அவர் சோனியா காந்தியை டெல்லி சென்று சந்தித்து பாராட்டினார்.
 
டெல்லியிலிருந்து ஹைதராபாத் திரும்பியதும் பேச்சை மாற்றி கொண்டார். தெலங்கானா மக்களின் கோரிக்கையை ஏற்று சோனியா காந்தி தெலங்கானா மாநிலத்தை உருவாக்க துணையாக இருந்தார். இதற்கு நன்றி செலுத்தும் வகையில், தெலங்கானா மக்கள் தங்கள் வாக்குகளை காங்கிரசுக்கு செலுத்தி வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
 
சந்திரசேகர ராவ் போராடியதால்தான், தெலங்கானா கிடைத்தது என்று அவர் கூறி வருகிறார். மத்திய அரசு கொடுக்காவிட்டால் எப்படி கிடைக்கும். இதில் உண்மையாகவே பல இழப்புகளை சந்தித்து, தியாகம் செய்தது காங்கிரஸ்தான். இது மக்களுக்கு தெரியும் என்று விஜயசாந்தி கூறினார்.