Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டெல்லியில் பெண்கள் கத்தி எடுத்துச் செல்ல அனுமதி


Abimukatheesh| Last Updated: சனி, 7 ஜனவரி 2017 (17:58 IST)
டெல்லி மெட்ரோ ரெயிலில் பெண்கள் தங்களது பாதுகாப்புக்காக கத்தி எடுத்துச் செல்ல சி.எஸ்.ஐ.எப் அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

 

 
டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களை பாதுகாக்கும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிமுறைகளில் தற்போது சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
 
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், டெல்லி மெட்ரோ ரெயிகளில் பயணிக்கும் பெண்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக கத்தி எடுத்துச் செல்ல அனுமதி வழங்கியுள்ளனர்.
 
மேலும், தீப்பெட்டி, லைட்டர் போன்ற பொருட்களையும் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கத்தி போன்ற ஆயுதங்கள் மற்றும் தீ விபத்தை ஏற்படுத்தும் பொருட்கள் ரெயிலில் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், பெண்கள் பாதுகாப்புக்காக தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :