வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 5 ஜூலை 2015 (15:18 IST)

பொது இடத்தில் இளம்பெண் நிர்வாணப்படுத்தி அவமானம்; முன்னாள் ராணுவ வீரர் கைது

முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் மோட்டாரில் சென்ற இளம்பெண்ணை வழிமறித்து பொதுமக்கள் மத்தியில் அவமானபடுத்தி படம்பிடித்துள்ளார்.
 
ஜம்மு&காஷ்மீர் மாநிலம் உத்தம்பூர் மாவட்டத்தில் உள்ள ஜகனூ பகுதியில் இளம்பெண் ஒருவர் வாலிபருடன் மோட்டார் பைக்கில் சென்றுள்ளார். அப்போது முன்னாள் ராணுவ வீரர் உள்பட 5 பேர் அவர்களை வழி மறித்துள்ளனர்.
 
மேலும் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துள்ளனர். அந்த இளம் பெண் 5 பேர் கொண்ட கும்பலிடம் தொடர்ந்து போராடியுள்ளார். எனினும், அவர்கள் இளம்பெண்ணை பொதுமக்கள் முன்னிலையில் ஆடையை களைத்து நிர்வாணமாக்கி அவமானப்படுத்தினர்.
 
மேலும், இந்த சம்வத்தை அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் சம்பவத்தை தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமுக வலைத்தளங்களி பரவி வருகிறது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த முன்னாள் ராணுவ வீரர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.