பெண்களிடம் பணம் மோசடி செய்த நபருக்கு சரமாரி அடி உதை

money
Last Modified செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (14:41 IST)
கர்நாடக மாநிலத்தில் போலி கூட்டுறவு சங்கம் தொடங்கி ஒன்றரை கோடி ரூபாய் வரை வாடிக்கையாளர்களிடமிருந்து இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிய நபரை பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோலார் மாவட்டத்தில் உள்ள வேம்கல் பகுதியில் வசித்துவருபவர் சீனிவாசன். இவர் சூரியோதயா கூட்டுறவு சங்கம் என்ற போலி நிறுவனம் தொடங்கி சுமார் 50 க்கும் மேற்பட்ட பெண்களிடம் இருந்து சுமார் ஒன்றரை கோடி அளவுக்குப் பணம் பெற்றுவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
 
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர் . அப்போது சினீவாசன் மற்றொரு பகுதியில் போலி நிறுவனத்தின் அலுவலகம் திறப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
karnataka
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் அங்கு சென்று சீனிவாசனை கையும் களவுமாக பிடித்து பணத்தை கேட்டு சரமாரியாக அடித்து உதைத்தனர். அதன்பின்னர் மோசடி  நபரை போலீஸில் ஒப்படைத்தனர். 


இதில் மேலும் படிக்கவும் :