வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 8 அக்டோபர் 2015 (22:27 IST)

ஆதரவாக பேசினால் ஓரினச் சேர்க்கையாளரா? விப்ரோவிடம் 10 கோடி நஷ்ட ஈடு கேட்கும் பெண்

விப்ரோ நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் சமத்துவமின்மை இல்லை எனக் கூறி 10 கோடி ரூபாய் இழப்பீடு கோரியிருக்கிறார்.
 

 
இங்கிலாந்தில் உள்ள விப்ரோ கிளையில் பணிபுரிந்து வந்த இந்திய பெண்மணி ஷ்ரேயா உகில் (39). இவர் முதலில் பெங்களூரில் உள்ள விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். பிறகு, 2010ஆம் ஆண்டு லண்டன் கிளைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
 
இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு ராஜினாமா செய்யப்பட்டுள்ளார். இதனால், ஷ்ரேயா உகில், லண்டன் விப்ரோ நிறுவனம் மீது பல்வேறு பாலியல் புகார்கள் அடங்கிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.
 
அதில், லண்டன் விப்ரோ அலுவலகம் தன்னிடம் ஆண், பெண் பாகுபாட்டுடன் நடந்து கொண்டதாகவும், பெண் ஊழியர்களை மட்டம் தட்டுவதுடன், அவர்களுக்கு சம உரிமை வழங்க மறுத்ததாகவும் கூறியுள்ளார்.
 
இதுதவிர, பெண் ஊழியருக்கு ஆதரவாக பேசினால், அவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள் என முத்திரை குத்தப்படுகின்றனர் என்றும் ஆண்களை விட பெண்களுக்கு குறைவாகவே ஊதியம் வழங்கப்படுவர்தாகவும் அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
 
மேலும், தன்னை பணியில் இருந்து நீக்கியதாலும், முறையற்ற செயல்களாலும் தான் உடலளவிலும், மனதளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி விப்ரோ நிறுவனத்திடம் 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கோரியும் கேட்டுக்கொண்டுள்ளார்.