வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 10 மே 2017 (12:16 IST)

நூதனமாக அமேசானை ஏமாற்றி 70 லட்சம் சம்பாதித்த பெண்!

நூதனமாக அமேசானை ஏமாற்றி 70 லட்சம் சம்பாதித்த பெண்!

சமீப காலமாக ஆன்லை வர்த்தகம் அதிகமாகிவிட்டது. நகரங்களில் இருந்த இந்த பழக்கம் தற்போது கிராமங்களுக்கும் பரவ ஆரம்பித்து விட்டது. இருந்த இடத்தில் இருந்தே தனக்கு தேவையானதை ஆர்டர் செய்துவிடுகிறோம். வீட்டிலேயே கொண்டு வந்து தருகிறார்கள்.


 
 
ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்கும் போது தரமாக இருக்குமா? நம்பிக்கையாக இருக்குமா? ஏமாற்றுவார்களா என அந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் மீது பலருக்கும் சந்தேகம் இருக்கும். ஆனால் பெங்களூரில் பெண் ஒருவர் அந்த நிறுவனத்தையே நூதனமாக ஏமாற்றி வந்துள்ளார்.
 
பெங்களூர் ஹொரமாவு பகுதியை சேர்ந்த 32 வயதான தீபன்விதா கோஷ் என்ற பெண் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பழக்கம் உடையவர். இவர் அமேசான் நிறுவனத்திடம் தனது கைவரிசையை காட்டி 70 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார்.
 
பல்வேறு பெயர்களில் பொருட்களை ஆர்டர் செய்து, பொருட்களை வாங்கிய பின்னர். தனது வீட்டில் உள்ள மோசமான பழைய பொருட்களை அமேசானுக்கே திருப்பி அனுப்பி வந்துள்ளார்.
 
விலை உயர்ந்த செல்போன்கள், டிவி, கேமரா உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை 104 முறை பல்வேறு பெயர்களை ஆன்லைனில் வாங்கியுள்ளார். அதனை வாங்கிய அடுத்த 24 மணி நேரத்திலேயே அவை சரியில்லை என கூறி பழைய பொருட்களை அதில் வைத்து அனுப்பிவிடுவார். பணத்தையும் திரும்ப பெற்றுவிடுவார்.
 
வாங்கிய புதிய பொருளை வெளியே விற்றும் லாபம் பார்த்து வந்துள்ளார் அந்த பெண். அமேசானை பொறுத்தவரை சரியில்லை என வாடிக்கையாளர்கள் திருப்பி அனுப்பும் பொருட்களை சோதித்து பார்ப்பதில்லை. கடந்த 1 வருடமாக இந்த பெண் இப்படி செய்து வர சந்தேகத்தின் பெயரில் அந்நிறுவன அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
 
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் செய்து வந்த நூதன திருட்டு தெரியவர அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதன் மூலம் அந்த பெண் 70 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்துள்ளார்.