1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 27 டிசம்பர் 2016 (20:48 IST)

50 நாட்களில் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது: வெங்கையா நாயுடு

50 நாட்களில் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது என்றும், கருப்புப்பண ஒழிப்பிற்கு பிறகு இந்திய பொருளாதாரம் சிறப்பான நிலையை அடையும் என்றும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.


 

 
கருப்பு பணத்தை ஒழிக்கவே 500 மற்றும் 1000 ரூபாய் நோடுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்தது. அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் சில்லரை தட்டுபாடு மற்றும் பணத்தட்டுபாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இன்று வரை அவதிப்பட்டு வருகின்றனர்.
 
எதிர் கட்சிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து ரூபாய் நோட்டை செல்லாது என்ற அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என்று தெரிவித்து வந்தனர். இதற்கிடையே பிரதமர் மோடி கருப்பு பணத்தை ஒழிக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும், சில்லரை தட்டுபாடு மற்றும் பணத்தட்டுபாடு சூழல் 50 நாட்களில் சரி ஆகிவிடும் என்று கூறினார்.
 
மேலும் அதற்குள் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் எளிதாக கிடைக்கப்பெறும் என்று தெரிவித்தார். இன்றுவரை பணத்தட்டுபாடு தொடர்ந்து கொண்டே தான் உள்ளது.
 
இந்நிலையில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, 50 நாட்களில் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
எதிர்ப்பார்ப்புகள் அதிகமாக உள்ளது, நிலைமை விரைவில் சீராகும். கருப்புப்பண ஒழிப்புக்குப் பிறகு இந்திய பொருளாதாரம் சிறப்பான நிலையை அடையும், என்று கூறியுள்ளார்.