வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 11 அக்டோபர் 2017 (10:29 IST)

சட்டசபை தேர்தல் எதிரொலி: குஜராத்துக்கு குவியும் சலுகைகள்

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து அந்த மாநிலத்தில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் பாஜக உள்ளது. எனவே உபியை போலவே குஜராத் மாநிலத்திற்கு சலுகைகள் குவிந்து வருகிறது



 
 
முதல்கட்டமாக குஜராத் மாநிலத்தில் VAT வரி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் குஜராத்தில் அதிகளவில் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.93ம், டீசல் லிட்டருக்கு ரூ.2.72ம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் இன்னும் பல சலுகைகள் அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் குஜராத் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க ஆளும் கட்சியின் அராஜகத்தை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது. ராகுல்காந்தி குஜராத் மாநிலத்தில் தானே களமிறங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதியை இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.