வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 21 மே 2015 (09:37 IST)

ஒயின் அளவை கூட்ட கேரளத் திருச்சபை வேண்டுகோள்

தேவலாயங்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தள்ள நிலையில், அதற்கேற்ப ஆண்டுதோறும் தம்மால் உற்பத்தி செய்யப்படும் ஒயினின் அளவை அதிகப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கேராளாவில் உள்ள சிரியன் மலபார் கத்தோலிகத் திருச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.
 
கத்தோலிக கிறிஸ்தவ வழிபாடுகளில் முக்கியமான திருப்பலி பூஜையின் முடிவில், ஒயினில் தோய்க்கப்பட்ட அப்பம் வழங்கப்படுகிறது. இதற்கு பயன்படுத்தப்படும் ஒயினை சிரியன் மலபார் கத்தோலிகத் திருச்சபை, அரசின் அனுமதி பெற்றுத் தயாரித்து வந்தது.
 
ஆண்டுக்கு 1500 லிட்டர் ஒயின் தயாரிக்க 23 ஆண்டுகளுக்கு முன் அனுமதி அளிக்கப்பட்டதாகவும் இதை 5,000 லிட்டராக உயர்த்த வேண்டும் என்று தாம் கேட்டுள்ளதாக சிரியன் மலபார் திருச்சபையின் பேச்சாளர் அருட் தந்தை பால் தெல்லகாட் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
 
சடங்குகளில் முக்கியமான அங்கமாக இருக்கும் இந்த பழரசத்தை தாம் சந்தையில் இருந்து பெறுவதில்லை என்றும் அதே போல தேவாலயத்தால் தயாரிக்கப்படும் பழரசம் விற்கப்படுவதும் கிடையாது என்றும் அவர் மேலும் கூறினார்.