வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (18:42 IST)

மைசூரில் அடுத்த மாதம் ஒயின் திருவிழா

மைசூரில் வரும் செப்டம்பர் மாதம் ஒயின் திருவிழா நடத்த கர்நாடகா மாநில ஒயின் வாரியம் திட்டமிட்டுள்ளது.


 

 
கர்நாடகாவில் ஒயின் கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும் சுற்றுலாவை மேம்படுத்தவும் வரும் செப்டம்பர் மாதம் மைசூரில் ஒயின் திருவிழா நடத்த அம்மாநில ஒயின் வாரியம் திட்டமிட்டுள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் டி சோமு தெரிவித்துள்ளார்.
 
மேலும், கர்நாடகாவில் ஒயின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு என ஒரு வாரியம் உருவாகப்பட்டு, பத்து ஆண்டுகளில் இதுவரை 15 ஒயின் ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. சுமார் 300 ஒயின் விற்பனை கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
 
ஒயின் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் திராட்சையை அதிகளவில் பயிரிடும் இரண்டாவது மாநிலமாக கர்நாடகா உள்ளது.
 
ஒயின் தயாரிக்க பயன்படும் திராட்சை வகைகளில் ‘பெங்களூர் புளு’ என்று அழைக்கப்படும் திராட்சை வகைகள்தான் 40 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது.