வேறு பெண்ணோடு சென்ற குடும்பத் தலைவன் – மனைவி மற்றும் மகள்கள் எடுத்த அதிர்ச்சி முடிவு !

Last Modified புதன், 14 ஆகஸ்ட் 2019 (11:24 IST)
கர்நாடகாவில் தனது குடும்பத்தை நிர்க்கதியாக விட்டுவிட்டு காதலியோடு கணவர் சென்று விட்டதால் அவரது மனைவி மற்றும் மகள்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் சித்தய்யா. இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும் மானசா மற்றும் பூமிகா என்ற இரு மகள்களும் உள்ளனர். இவர் கர்நாடக மாநில மின் வாரியத்தில் பணியாற்றி வருகிறார். மகிழ்ச்சியாக இந்த குடும்பத்தில் புயலாக வீசியது சித்தய்யாவின் கள்ளக்காதல் லீலை. இவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதை அறிந்த ராஜேஸ்வரி மற்றும் மகள்கள் சித்தய்யாவிடம் சண்டையிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் பேச்சைக் கேட்காத  சித்தய்யா கோபித்துக்கொண்டு தன் காதலியோடு தமிழ்நாட்டுக்கு சென்று அங்கு வாழ்ந்து வந்துள்ளார்.

மேலும் தனது சொந்த வீட்டுக்கு மனைவி, குழந்தைகளைப் பார்க்க வருவதேயில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மன் உளைச்சலுக்கு உள்ளான ராஜேஸ்வரி மற்றும் அவரது இரண்டு மகள்களும் ராஜேஸ்வரியின் அண்ணனுக்கு ஒரு வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். அதில் ‘ நல்ல அப்பா கிடைத்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்னுடைய அப்பா எங்கள் வாழ்க்கையை சீரழித்துவிட்டார்.’ என இருந்துள்ளது.

இதைப்பார்த்து சந்தேகமடைந்து அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மூவரும் மின்விசிறியில் தூக்கு மாட்டி இறந்துள்ளனர். இதையடுத்து போலிஸாருக்கு அவர் தகவல் சொல்ல இது சம்மந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை சித்தய்யாவைக் கைது செய்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :