1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 3 டிசம்பர் 2016 (15:53 IST)

தேசிய கீதத்துக்கு அர்த்தம் கேட்டால் எல்லாரும் ஃபெயில்: ராம் கோபால் வர்மா காட்டம்!

தேசிய கீதத்துக்கு அர்த்தம் கேட்டால் எல்லாரும் ஃபெயில்: ராம் கோபால் வர்மா காட்டம்!

நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் திரைப்படம் தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அன்மையில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது பல்வேறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு பிரபலங்கள் எதிர் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து காட்டமாக பதிவிட்டு வருகிறார்.
 
இது குறித்து அவர் பதிவிட்டதில் சில:

 
இரவு நேர விடுதிகள், பார்களில் தேசிய கீதம் இசைப்பதை ஏன் கட்டாயமாக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 
நாட்டில் உள்ள அனைத்து செய்தித்தாள்களிலும் தினமும் முதல் பக்கத்தில் ஏன் தேசிய கீதத்தை ப்ரிண்ட் செய்யக்கூடாது. இரண்டாவது பக்கத்திலிருந்து நாம் செய்தியை படிக்கலாமே என கேட்டுள்ளார்.

 
தொலைக்காட்சி, ரேடியோ போன்றவற்றில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் ஏன் இசைக்க கூடாது என கேட்டுள்ளார்.