வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Modified: திங்கள், 23 ஜூன் 2014 (16:52 IST)

நரேந்திர மோடியை சந்தித்த அமீர் கான்

பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தின் தெற்கு பிளாக்கில் நடைபெற்ற இச்சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.  
 
நரேந்திர மோடியை சந்தித்தபோது அமீர்கான் அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'சத்யமேவ ஜெயதே' -வின் டிவிடி தொகுப்பினை கையில் வைத்திருந்ததாக தெரிகிறது.
 
கடந்த 16 ஆம் தேதி போபாலில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமீர் கான், நரேந்திர மோடி ஏழை மக்களின் நலன் குறித்து பேசியுள்ளார். ஏழைகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டுவருவது குறித்தும் தெரிவித்துள்ளார். அவர் அவருடைய லட்சியங்களை அடைய நாம் ஒத்துழைக்க வேண்டும் எனப் பேசியிருந்தார்.
 
நரேந்திர மோடி மீது அதிகமாக எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.