வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (18:04 IST)

விஜயகாந்த் பேசியதில் என்ன தவறு?: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

ஆவின் பால் ஊழல் குறித்து விஜயகாந்த் பேசியதில் என்ன தவறு உள்ளது என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 

 
அவதூறு வழக்குகள் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், விஜயகாந்த் மீது தமிழக அரசால் தொடரப்பட்ட அவதூறு வழக்கினை எதிர்த்து தேமுதிக வழக்கறிஞர் ஜிஎஸ் மணி ஆஜராகி வாதாடினார்.
 
வழக்கு தொடர்பவர்களாகவும், வாதங்களை முன் வைப்பவர்களாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் செயல்படுவது சந்தேகத்தை எழுப்புவதாக உள்ளது என அவர் தெரிவித்தார்.
 
இந்த வாதத்தின் மீது குறுக்கிட்ட நீதிபதி தீபக் மிஸ்ரா, ஆவின் முறைகேடு குறித்து எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் பேசியதில் என்ன தவறு உள்ளது என தமிழக அரசு வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பினார். மேலும் ஜனநாயக நாட்டில் அரசின் குறைகளை சுட்டிகாட்டி பேச உரிமை இல்லையா எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.