வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 11 ஏப்ரல் 2016 (08:51 IST)

மேற்கு வங்கம், அசாம் சட்டமன்ற தேர்தல்: நடைபெற்று வருகிறது 2 ஆம் கட்ட வாக்குபதிவு

மேற்கு வங்கம், அசாம்மில் 2 ஆம் கட்ட வாக்குபதிவு

மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநில சட்ட சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குபதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.


 

 
மேற்கு வங்க மாநிலத்தில் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
 
அதன்படி, 31 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தலின் இரண்டாம் பிரிவு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

பதற்றம் மிகுந்த வாக்குசாவடிகளில் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் பலத்த பாதுகாப்புடன் அங்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
 
இதேபோல, அசாமில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
 
அதன்படி மொத்தமுள்ள 126 சட்டமன்றத் தொகுதிகளில், 65 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 4 ஆம் தேதி நடைபெற்றது.
 
இந்நிலையில், இரண்டாவது மற்றும் இறுதி வாக்குப்பதிவு 61 தொகுதிகளுக்கு நடைபெற்று வருகின்றது. இதில் 525 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
 
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக, 12,699 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 
அசம்பாவிதமும் இன்றி தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்காக, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.