வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (12:39 IST)

இந்த ஆண்டு வெயிலின் அளவு அதிகமாக இருக்கும்: வானிலை ஆராய்ச்சி துறை

வெயிலின் அளவு இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது.


 

 
இந்திய வானிலை ஆராய்ச்சி துறை, ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம்வரை கோடை காலத்துக்கான வானிலை கணிப்பு குறித்த அறிக்கையி வெளியிட்டுள்ளது.
 
அந்த அறிக்கையில். இந்த கோடை காலத்தில், நாட்டின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் வெயில் அளவு, இயல்பை விட ஒரு டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதியில் அனல் காற்று வீசுக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
டெல்லியில் இருந்து தெலுங்கானா வரையுள்ள மாநிலங்கள் அடங்கிய, இந்த மண்டலத்தில், வெயிரின் அளவு அதிகமாக நிலவுவதற்கு 76 சதவீத வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தில் மிதமான மற்றும் கடுமையான அனல் காற்று வீசுக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
இவ்வாறு வெயில் அளவு அதிகமாக இருப்பதற்கு "எல்-நினோ" தான் காரணம் என்றும் வானிலை ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது.
 
அதன்படி. "கடந்த ஆண்டு பசிபிக் பெருங்கடல் மீது உருவாகிய எல்-நினோ தொடர்ந்து நீடிக்கிறது. ஆயினும், இந்த எல்-நினோ படிப்படியாக பலவீனம் அடையும் என்றும் கூறப்படுகின்றது.
 
இதேபோல தமிழகத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.