Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நின்று போன திருமணம் ; காரணம் கேட்டால் அதிர்ச்சி அடைவீர்கள்...

செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (16:39 IST)

Widgets Magazine

உத்தர பிரதேசத்தில் நடைபெறவிருந்த திருமணம் ஒன்று ஒரு சிறிய காரணத்தினால் நின்று போயுள்ளது.


 

 
இதுவரை, வரதட்சணை பிரச்சனை, மாப்பிள்ளையை பிடிக்கவில்லை, மணப்பெண் வேறு ஒருவருடன் ஓட்டம், மணமகன் போதையில் இருந்தார் என பல்வேறு காரணங்களால் திருமணம் நின்று போனது பற்றி நாம் கேள்வி பட்டிருக்கிறோம்.
 
ஆனால், உத்தரபிரதேசத்தில் ஒரு ரசகுல்லாவிற்கு ஒரு திருமணம் நின்று போயுள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள குர்மபூர் எனும் இடத்தில் சமீபத்தில் ஒரு திருமணம் நடைபெற இருந்தது. அதற்காக மணமகள் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
அப்போது, அனைவருக்குமான உணவு, அவர்களாகவே எடுத்து கொள்ளும் முறையில் (பஃவே) அளிக்கப்பட்டது. அந்த மெனுவில் ரசகுல்லாவும் இருந்தது. ஒரு நபருக்கு ஒரு ரசகுல்லா கொடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதற்காக மணமகள் வீட்டின் சார்பில் அங்கு ஒருவர் நிறுத்தப்பட்டிருந்தார்.  அப்போது மணமகன் வீட்டை சேர்ந்த ஒருவர் 2 ரசகுல்லாவை எடுத்து சாப்பிட்டு விட்டாராம்.
 
எனவே பிரச்சனை தொடங்கியது. அதில் அந்த இடமே கலவரம் ஆனது. இதை பார்த்த மணமகள், தன்னுடைய குடும்பம் மற்றும் உறவினர்களை அவமானப்படுத்திய இவர்களின் குடும்பத்தில் எனக்கு மணமகன் வேண்டாம், திருமணத்தையே நிறுத்துங்கள் எனக் கூறிவிட்டாரம். இதனால் அந்த திருமணம் நின்று போனது. இதுபற்றி மணப்பெண்ணின் தந்தை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
 
ஒரு ரசகுல்லாவால் திருமணம் நின்று போனது அந்த பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

எடப்பாடி முதல்வராக நீடிப்பாரா?: என்ன சொல்கிறார் ஓபிஎஸ்?

அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தைக்கு இரு அணிகளும் சம்மதம் தெரிவித்துள்ள ...

news

ஓபிஎஸுக்கு இது அழகல்ல: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சாடல்!

அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து நேற்று இரவு அதிமுக அமைச்சர்கள் அவசர ஆலோசனை ...

news

டிமிக்கி கொடுத்து வந்த தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது....

இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று அதை திரும்ப செலுத்தாமல், லண்டலின் ...

news

தினகரனை விசாரிக்க டெல்லி போலீசார் வரவில்லை - பின்னணி என்ன?

இரட்டை இலை சின்னத்தை பெற ரூ.60 கோடி லஞ்சம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து ...

Widgets Magazine Widgets Magazine