வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 28 மே 2015 (23:40 IST)

ராமர் கோயில் விவகாரத்தில் நாங்கள் பின்வாங்கவில்லை - அமித் ஷா ஆவேசம்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்த விவகாரத்தில்  நாங்கள் ஒரு போதும் பின்வாங்கமாட்டோம் என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
 
குஜராத் மாநிலம், சூரத் நகரத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் நாங்கள் சரியான நேரத்தில், சரியான முடிவை எடுப்போம். ராமர் கோயில் விவகாரம், உச்ச நீதிமன்றத்தில் உள்ளதால், இறுதி தீர்ப்பு வரை காத்திருப்போம்.
 
அனைவரும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். பாஜகவும் அந்த தீர்ப்புக்கு கட்டுப்படும். ராமர் கோயில் கட்டப்படுவது குறித்து அனைத்துக் கட்சிகளையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணுவதை விரும்புகிறோம். அதன் அடிப்படையில் பாஜக ஒரு தெளிவான முடிவு எடுக்கும்.  ஆனால், எக்காரணம் கொண்டும் ராமர் கோயில் கட்டுவதில் நாங்கள் பின்வாங்கப்போவதில்லை என்றார் ஆவேசமாக.
 
ஆயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் பாஜக தற்போதும் மிக உறுதியாக உள்ளதையே, அமித் ஷா பேச்சு பகிரங்கமாக வெளிப்படுத்துகிறது.