செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 15 நவம்பர் 2016 (13:17 IST)

ஹெலிகாப்டர்களில் பறக்கும் புதிய ரூபாய் நோட்டுகள் [வீடியோ]

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாட்டைப் போக்கவும், உடனடியாக பணம் விநியோகம் செய்யவும் வங்கிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


 

பிரதமர் நரேந்திர மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்றவதற்கு கடந்த சில நாட்களாக பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

அதேபோல், வங்கி ஏ.டி.எம். மையங்களில் போதுமான இருப்பு இல்லாததாலும், நாளொன்றிற்கு குறைந்தபட்சம் 2,500 ரூபாய் மட்டும் எடுக்க முடியும் என்பதாலும் சிரமப்பட்டு வந்தனர். மேலும், புதிய ரூபாய் நோட்டுக்களும் உரிய இடங்களுக்கு சென்று சேராததால், நாடு முழுவதும் ரூபாய் நோட்டுக்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, நாட்டின் முக்கிய தொழில்நகரமான ஜார்கண்ட் மாநிலம் பொக்காரோவில், தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், பொகாரோ நகரத்திற்கு புதிய ரூபாய் நோட்டுகளை ஹெலிகாப்டர் மூலம் ரிசர்வ் வங்கி அனுப்பி வைத்துள்ளது.

அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட பணம் உடனடியாக பொகாரோ நகரிலுள்ள அனைத்து வங்கிகளுக்கும் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

மேலும், சில பணம் தட்டுப்பாட்டால் வர்த்தகம் பாதிக்கும் பகுதிகளுக்கு இதே போன்று ஹெலிகாப்டரில் பணம் விநியோகம் செய்வது குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

வீடியோ இங்கே:

 


Courtesy : ANI