வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 8 ஜூலை 2015 (12:25 IST)

வியாபம் முறைகேடு விவகாரத்தால் ராஜினாமா செய்ய மாட்டேன்: சிவராஜ் சிங் சவுகான்

வியாபம் ஊழல் தொடர்பான விவகாரத்தால், தானது பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
 
மத்தியப் பிரதேச மாநில தொழில்முறை தேர்வு வாரியம் (வியாபம்), நடத்திய தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாகவும், ஏராளமானோர் பணம் கொடுத்து பணி நியமனம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த மெகா மோசடியில் தொடர்புடைய பலர் மர்மமான முறையில் இறந்தனர்.
 
இந்நிலையில், வியாபம் ஊழல் தொடர்பாக மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டிளித்தார்,
 
அந்த பேட்டியில் சிவராஜ் சிங் சவுகான் கூறியிருப்பதாவது:–
 
வியாபம் முறைகேடு பற்றி தெரியவந்ததும் அதில் ஆழமான விசாரணைக்கு உத்தரவிட்டேன். இந்த விவகாரம் சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. என்றாலும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட சிபாரிசு செய்துள்ளேன்.
 
ஆனால் இந்த விவகாரத்தில் நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கூறி வருகிறது. விசாரணை மீது எனக்கு முழு நம்பிக்கை இருப்பதால் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை.
 
பிரதமர்  நரேந்திர மோடி என்மீது மிகுந்த நம்பிகை கொண்டுள்ளார். அவ்வாறே மத்திய அரசும் என்மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது.
 
இந்த விஷயத்தில் பாஜகவும் எனக்கு முழு ஆதரவு அளித்துள்ளது. அதே போல் நானும் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். எனவே நான் பதவி விலகும் பேச்சுக்கே இட மில்லை. இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.