Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கோலி, அனுஷ்கா நிச்சயதார்த்தம் ஜனவரி-1?


Abimukatheesh| Last Updated: வியாழன், 29 டிசம்பர் 2016 (18:46 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தொடர் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆகிய இருவருக்கும் வரும் புத்தாண்டு முதல் நாளான ஜனவரி 1ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைப்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

 

 
இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரரான விராட் கோலியும், பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவும் வெகு காலமாக காதலித்து வருவது நடு முழுவதும் அறிந்த ஒன்று. அவ்வப்போது இவர்கள் இருவரும் பிரிந்தாலும் மீண்டும் இணைந்து விட்டனர். இருவரும், தங்கள் உறவு குறித்து வெளிப்படையாக ஊடகங்களில் பேசுவது கிடையாது.
 
இந்நிலையில் தற்போது இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உத்ரகாண்ட் மாநிலம் நரேந்திர நகரில் உள்ள ஆனந்தா ஓட்டலில் இவர்களது நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி வரும் ஜனவரி மாதம் 1ஆம் தேதி நடைப்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :