வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 2 மே 2015 (19:27 IST)

கல்லூரியில் மாணவரை அடித்து உதைத்த முதல்வர்: சர்ச்சையை கிளப்பும் வீடியோ!

பெங்களூருவில் உள்ள தொழில்துறை பயிற்சி நிறுவன முதல்வர், மாணவர் ஒருவரை நோட்ஸ் எடுக்கவில்லை என  அடித்து உதைக்கும் காட்சி செய்தி நியூஸ் டுடே  தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

 
இதை நேரில் பார்த்த மாணவர் பள்ளி வகுப்பறைக்குள் நடந்த இந்த காட்சியை தனது ஸ்மார்ட்போனில் படம் பிடித்துள்ளார்.
 
நாங்கள் இந்த முதல்வர் தேவையில்லை என்று நினைக்கிறோம். நீங்கள் இந்த வீடியோவை பாருங்கள் ஒருமாணவரை முதல்வர் எவ்வாறு கொடுமை படுத்துகிறார். இதுபோல் கடந்த 13 வருடங்களாக நடந்து வந்துள்ளது. மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை கருதி இது குறித்து யாரிடமும் புகார் கூறவில்லை என மாணவர்கள் கூறியுள்ளனர்.
 
முதல்வர், மாணவர்களை புத்தகம் கொண்டு வரவில்லை; ஷூஅழுக்காக உள்ளது; உடைகளை அயர்ன் செய்து போடவில்லை போன்ற  வேடிக்கையான காரணங்களுக்காக துன்புறுத்துகிறார் என கூறியுள்ளனர்.
 
இந்த கல்லூரி எம்எல்ஏ ஒருவரின் அறக்கட்டளை மூலம் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் போலீசில் மாணவர்கள் எந்தவித புகாரும் அளிக்கவில்லை. தற்போது மாணவர்கள் மனித உரிமை ஆணையத்தையும் போலீசாரையும் அணுக முடிவு செய்துள்ளனர்.
 
எனினும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட தொழில்துறை பயிற்சி நிறுவன முதல்வரிடமிருந்து எந்தவித பதிலும் இல்லை.