வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : புதன், 25 நவம்பர் 2015 (13:16 IST)

அசலை மட்டும் திருப்பி கொடுக்கிறேன் : மனம் மாறிய விஜய் மல்லையா

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் தலைவர் விஜய் மல்லையா தான் வங்கிகளிடம் வாங்கிய கடனில், அசலை மட்டும் திருப்பி செலுத்த முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 
 
யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் மற்றும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் தலைவர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளிடம் வாங்கிய கடன் தொகை சுமார் ரூ.7000 கோடியை திருப்பி தரவில்லை என்று அறிவித்த வங்கிகள், அவரை  “வேண்டும் என்றே கடனை திருப்பி தராத ஒரு மோசடியாளர்” என்று சமீபத்தில் அறிவித்திருந்தது.
 
மேலும், அந்நிறுவனம் கடன் வாங்கும் போது பிணையாக வைத்த சொத்துக்களை ஏலத்தில் விடப்படுவதாக வங்கிகள் அறிவித்தது. இந்த ஏலத்தை கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய பாரத ஸ்டேட் வங்கி உள்பட 17 வங்கிகள் கொண்ட அமைப்பு நடத்துவதாக அறிவித்தது.
 
இந்நிலையில் வங்கிகளிடம் வாங்கிய கடனில் அசல் தொகையான சுமார் ரூ.4500-ரூ.5000 கோடியை மட்டும் திருப்பி தர விஜய் மல்லையா முடிவெடுத்துள்ளார். இதற்காக சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. 
 
அவர் செலுத்த வேண்டிய வட்டி தொகை மட்டும் ரூ.2000 கோடி. பாரத ஸ்டேட் வங்கி வட்டி தொகையை முழுமையாக தள்ளுபடி செய்ய முடியாது என்றும் குறைந்த பட்ச வட்டி தொகையை மட்டுமாவது கிங்பிஷர் நிறுவனம், சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.