Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நாங்க ஓ.பன்னீர் செல்வம் பக்கம் - வெங்கையா நாயுடு ஓபன் டாக்


Murugan| Last Modified வியாழன், 22 டிசம்பர் 2016 (16:29 IST)
தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசுக்கே எங்கள் ஆதரவு என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.

 

 
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் ஜெ.வின் தோழி சசிகலாவிற்கு அதில் விருப்பம் இல்லை என்றும், எடப்பாடி பழனிச்சாமியே அவரின் விருப்பமாக இருந்தது என்றும், அதை ஏற்காத மத்திய அரசின் விருப்பமாக ஓ.பன்னீர் செல்வமே இருந்தார் என அப்போதே செய்திகள் வெளியானது.
 
இதற்காக மத்திய அமைச்சர் வெங்கயாநாயுடு, சென்னை வந்து, ஜெ. மரணம் அடைந்த நேரம் முதல் அவரை அடக்கம் செய்யும் வரை உடன் இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
 
இந்நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு சமீபத்தில் பேட்டியளித்த அவர் “அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிட விருப்பமில்லை. ஆனால் தமிழக முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எங்கள் ஆதரவு உண்டு.
 
ஜெயலலிதாவே அவரை இரண்டு முறை முதல் அமைச்சராக அமர வைத்தார். எனவே முதலமைச்சர் என்கிற  முறையில் மத்திய அரசு அவரைத்தான் தொடர்பு கொள்ளும். மேலும், அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்” என்று அவர் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :