தமிழகத்தை கையில் எடுக்கும் பாஜக: மத்தியில் கசிந்த தகவல்?


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 3 ஜனவரி 2017 (14:04 IST)
ஜெயலலிதாவின் மறைவால் கட்சிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று மத்தய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

 
 
இது குறித்து, வெங்கையா நாயுடு அளித்த பேட்டியில், தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது அனைவருக்கும் தெரிந்ததே. ஜெயலலிதாவின் தனித்துவம், ஆளுமை மக்களிடையே அதிக செல்வாக்கை ஏற்படுத்தி இருந்தது. 
 
அதே சமயம் எங்களது அனுதாபிகள் சிலரது வாக்குகளையும் பெற்று வந்தார். அதிமுகவா? திமுகவா? என்று பார்த்தபோது, மக்கள் அதிமுக சிறந்தது என்று நம்பினர். அதனால் அந்தக் கட்சிக்கு வாக்களித்தனர். இதனால் அதிமுக தேசிய கட்சியாகவும் உள்ளது. 
 
தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது. ஜெ.வின் முகத்தை பார்த்து வாக்களித்தவர்கள் இனி பாஜகவுக்கு வாக்களிக்ககூடும். இது தமிழகத்தில் பாஜகவின் நிலையை உறுதியாக்கும் என தெரிவித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :