1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Veeramani
Last Modified: வியாழன், 8 மே 2014 (17:46 IST)

மக்கள் முன் நேருக்கு நேர் மோடி விவாதிக்கத் தயாரா? - கெஜ்ரிவால் சவால்

வாரணாசியில் பொது இடத்தில் மக்கள் முன் நேருக்கு நேர் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி விவாதத்துக்கு தயாரா என ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டர் சமூக வலைதளம் மூலம் சவால் விடுத்துள்ளார்.
"மோடியை பொது மேடையில் வெளிப்படையான விவாதத்துக்கு வருமாறு அழைக்கிறேன். காசி நகர மக்கள் எங்கள் இருவரிடமும் நேருக்கு நேர் கேள்விகள் எழுப்பட்டும். இடம், நேரம் மோடியின் விருப்பம்" இவ்வாறு கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
 
கங்கையில் பூஜை செய்ய தேர்தல் ஆணையத்திடம் மோடி அனுமதி கோரியதையும் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
இது குறித்து ட்விட்டரில் அவர் பதிவு செய்ததாவது:-
 
"கங்கையில் பூஜை செய்வது மத ரீதியான சடங்கு; அது அரசியல் நிகழ்வு அல்ல. இதற்கும் தேர்தல் ஆணைய அனுமதிக்கும் என்ன தொடர்பு. இப்படி எல்லாம் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோருவதன் மூலம் மோடி தனது சிறு செயல்களிலும் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்". இவ்வாறு கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.