வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 5 ஜூன் 2024 (11:20 IST)

ராகுல் காந்தி பிரதமராக உத்தவ் தாக்கரே சிவசேனா ஆதரவு.. மற்றவர்களும் ஆதரவு கொடுப்பார்களா?

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
பாஜக தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றுமா அல்லது இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்பதை இன்னும் ஓரிரு நாளில் தெரிந்து கொள்ளலாம். 
 
இந்த நிலையில் இந்தியா கூட்டணி கட்சியில் உள்ள சில கட்சிகள் ராகுல் காந்தியை பிரதமராக தேர்வு செய்ய ஆதரவு கொடுத்து வருவதாகவும் குறிப்பாக உத்தவ் தாக்கரே சிவசேனா ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
 
உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு என வெளிப்படையாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகள் இந்தியா கூட்டணிக்கு வந்துவிட்டால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி என்ற நிலையில் ரதமரை தேர்வு செய்தது தான் தற்போது குழப்பம் உள்ளது. 
 
இந்த நிலையில் உத்தவ் தாக்கரே பிள்ளையார் சுழி போட்டு உள்ள நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்பட அனைவரும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran