வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 22 ஜூலை 2014 (17:52 IST)

ஆண்டவனால் கூட கற்பழிப்புச் சம்பவங்களைத் தடுக்க முடியாது: உ.பி. ஆளுநர் கருத்து

உத்தர பிரதேசத்தில் கற்பழிப்புக் குற்றங்களை ஆண்டவனால்கூட தடுத்து நிறுத்த முடியாது என்று அம்மாநில ஆளுநர் அஜிஸ் குரேஷி கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் இதுபற்றிக் கருத்து தெரிவித்த ஆளுநர் குரேஷி, கடவுளால்கூட கற்பழிப்புச் சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியாது என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் லக்னோவின் மோகன்லால்கங் பகுதியில் 35 வயது பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், நேற்று மாலை ஆளுநரைச் சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்காக அரசாங்கத்தை ஊடகங்கள் கண்டிக்கக் கூடாது. உத்தர பிரதேசத்தில் இத்தகைய குற்றங்களை ஆண்டவனால்கூட தடுத்து நிறுத்த முடியாது.

உலகம் முழுவதிலும் இருந்து காவல் துறையினரைக் கொண்டு வந்து, உத்தர பிரதேசத்தில் குவித்தாலும் அவர்களால் கற்பழிப்புகளைத் தடுக்க முடியாது“ என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பலாத்கார சம்பவங்களை அரசால் தடுக்க முடியாது என்று சமீபத்தில் சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

உத்தர பிரததேசத்தில் அண்மையில் நடந்த பாலியல் வன்முறைகள்: