Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நோயாளியின் தலையணையாக துண்டிக்கப்பட்ட கால்: அதிர வைத்த புகைப்படம்

Last Modified ஞாயிறு, 11 மார்ச் 2018 (12:45 IST)
விபத்து ஒன்றில் சிக்கிய ஒருவரின் காலை துண்டித்த மருத்துவர்கள், அதே காலை அவருக்கு தலையணையாக வைத்ததாக வெளிவந்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தில் தனியார் பள்ளி வாகன ஓட்டுநா் ஒருவர் தனது குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த டிராக்டருடன் மோதியதால் ஏற்பட்ட விபத்து காரணமாக படுகாயம் அடைந்தார். அவர் அருகில் இருந்த ஜான்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த இளைஞரின் காலை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது

இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்து அந்த இளைஞரின் கால் துண்டிக்கப்பட்டது. பின்னர் துண்டிக்கப்பட்ட காலை அவருக்கே தலையணையாக வைத்த மருத்துவர்கள் அவரை வேறு வார்டுக்கு மாற்றியுள்ளனர். தலையணை பற்றாக்குறையால் இவ்வாறு மருத்துவர்கள் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் இந்த குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. நோயாளிகளின் அறைக்குள் துண்டிக்கப்பட்ட கால் எப்படி வந்தது என்று தங்களுக்கு தெரியாது என்றும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் மருத்துவனை நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :