வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: புதன், 17 செப்டம்பர் 2014 (13:40 IST)

முசாபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மேலும் 203 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க ஒப்புதல்

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர் நகரில் ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட மேலும் 203 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று முசாபர்நகர் மாவட்ட நீதிபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

முசாபர் நகரில் ஒரு பெண்ணை கேலி செய்தது தொடர்பாக எழுந்த வன்முறையில் சிக்கி 62 பேர் உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் சேதப்படுத்தப்பட்டன.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி அளிக்க மாநில அரசு ரூ.6 கோடியே 84 லட்சம் ஒதுக்கியது.

இந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்விடங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியிருக்கும் மேலும் 203 குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று போராட்டம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட லங்க், பாஜூ உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 203 குடும்பங்கள், தங்களுக்கும் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டதால், இழப்பீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை அம்மாநில அரசு பரிசீலிதத்து வந்தது.

அதன்படி இவர்களது கோரிக்கை ஏற்கப்பட்டு, இவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முசாபர்நகர் மாவட்ட நீதிபதி என்.பி.சிங் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.