Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அமெரிக்க தூதரகம் துவங்கியுள்ள நெக்சஸ் தொடக்க மையம்...

Last Modified வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (14:14 IST)
தலைநகர் டெல்லியில் அமெரிக்க தூதரகம் சார்பில் நெக்சஸ் தொடக்க மையம் அமெரிக்கன் சென்டரில் இன்று துவங்கப்பட்டுள்ளது.

 
அமெரிக்காவின் தொழில் முனைவோர் மூலம் மாறும் சூழ்நிலைக்கு ஏற்ப இந்தியாவின் புதுமையான தொடக்கங்களுக்கு உதவி செய்வதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 20 தொடக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாத இறுதியில் 3வது தொடக்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
 
இதுபற்றி தலைமை நிர்வாக அதிகாரி அர்பிதா சிங் கூறும் போது “எங்களிடம் ஏராளமான வணிக காப்பீட்டாளர்கள் உள்ளனர். ஆனால், நன்றாக செயல்படுபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கிறோம்” எனக் கூறினார்.
 
இன்றைய நிகழ்ச்சியில், 2018ம் ஆண்டுக்கான இரண்டு புதிய நெக்சஸ் முயற்சிகளை அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. அதில், முதல் குழு, இந்தியாவின் பெண் தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி அளிப்பதோடு, வழி காட்டுதல், நெட்வொர்க் வேலை வாய்ப்புகள் ஆகியவற்றையும் செய்கிறது.
 
இதற்கு முன் வங்காளதேசம், பூடான், நேபாள் மற்றும் இலங்கையில் இதுபோன்ற தொடக்க மையங்களை நெக்சஸ் அமைத்து வெற்றி கண்டுள்ளது. எனவே, தற்போது டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :