வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Geetha priya
Last Updated : வியாழன், 10 ஜூலை 2014 (12:44 IST)

2014-15 நிதிநிலை அறிக்கை : கிசான் (விவசாயி) தொலைகாட்சிக்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு

2014-15 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கிசான் தொலைகாட்சிக்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், வடகிழக்கு மாநிலங்களில் சாலைகளை சீரமைக்க ரூ. 3,000 கோடி ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 
 
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அர‌சி‌ன் முதல் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் தா‌க்க‌ல் செ‌ய்‌து வரு‌கிறா‌ர்.
 
நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வரும் அவர், கிசான் (விவசாயி) தொலைகாட்சி அடுத்த ஆண்டு நிறுவப்படும் எனவும் அதற்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், வடகிழக்கு மாநிலங்களில் சாலைகளை சீரமைக்க ரூ. 3,000 கோடி ஒதுக்கப்படும், பரேலி, லக்னோ, ஹட்ச், சூரத், தமிழ்நாடு ஆகிய இடங்களில் ஜவுளி நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
 
மேலும், அல்ட்ரா மெகா சூரிய சக்தி உற்பத்தி  திட்டங்களை ஊக்குவிக்க  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், நகரங்களை இணைக்கும் தொழிற்சாலை வளாக சாலைகளுக்காக ரூ.100 கோடி, துறைமுக திட்டங்களுக்காக ரூ.11,600 கோடி, தேசிய நெடுஞ்சாலைகளுக்காக ரூ. 37,800 கோடி ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.