வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 26 ஜூலை 2014 (12:42 IST)

'கடைசி வரை இந்தியப் பெண்ணாக இருப்பேன்' - சானியா கண்ணீர் பேட்டி

"நான் உண்மையான இந்தியப் பெண்; எனது தாய்நாட்டுப் பற்றை இன்னும் எத்தனை முறை நிரூபிக்க வேண்டும்? என் வாழ்வின் இறுதி வரை இந்தியப் பெண்ணாக தொடருவேன்" என்று பேசி உணர்ச்சிவசப்பட்டு அழுதார் சானியா மிர்ஸா.
 
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, தெலங்கானா மாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டதற்கு அந்த மாநிலத்தின் பாஜக தலைவர் லக்ஷ்மண் எதிர்ப்பு தெரிவித்தார். பாகிஸ்தானின் மருமருகளை (பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கை திருமணம் செய்தவர்) தெலங்கானா தூதராக நியமிப்பதா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சானியா, எங்களது குடும்பம் 100 ஆண்டு காலத்திற்கு மேலாக ஹைதராபாத்தை சேர்ந்தது என்றும், இறுதிமூச்சு உள்ளவரை இந்தியராக இருப்பேன் என்றும் உருக்கமாக கூறினார்.
 
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சானியா மிர்ஸா நேற்று தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தபோது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டார். கண்ணீர் மல்க பேசிய அவர் "இந்த நிகழ்வால் நான் உண்மையிலேயே மிகுந்த மனவேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். வேறு எந்த நாட்டிலும் இது போன்று நடக்குமா? என்று எனக்கு தெரியவில்லை. நான் உண்மையான இந்தியன், எனது தாய்நாட்டுப் பற்றை இன்னும் எத்தனை முறை நிரூபிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை. தெலங்கானா சார்பிலும், இந்தியா சார்பிலும் தொடர்ந்து போட்டிகளில் கலந்து கொள்வேன். எனது வாழ்வின் இறுதி வரை இந்திய பெண்ணாக தொடருவேன் என்று மீண்டும் உறுதிப்படக் கூறிக்கொள்கிறேன்" என்றார்.