Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாதுகாப்பற்ற ஆதார்? தற்காலிக எண் அறிமுகம்!

Aadhaar
Last Updated: வியாழன், 11 ஜனவரி 2018 (18:52 IST)
ஆதார் பாதுகாப்பற்றது என எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தற்போது அதற்கு மாற்றாக தற்காலிக எண் வழங்க ஆதார் அமைப்பு முடிவு செய்துள்ளது.

 
மத்திய மாநில அரசு நல திட்டங்களை பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் ஆதார் எண் கட்டாயம் என்று அறிவித்த பின்னும் மத்திய அரசு ஆதார் எண் கட்டாயம் என தொடர்ந்து வலியுறுத்து வருகிறது.
 
ஆதார் பாதுகாப்பற்றது என தொடர்ந்து பலரும் கூறி வருகின்றனர். அதனை உறுதிப்படுத்தும் வகையில் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் ஆதார் அமைப்பு ஆதார் எண்ணுக்கு பதிலாக தற்காலிக எண் வழங்க முடிவு செய்துள்ளது. 16 எண் கொண்ட விர்டூவல் ஐடி என்ற ஒன்றை வழங்க உள்ளது. இது ஆதார் எண் அடிப்படையில் வழங்கப்படும் என ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :