வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 31 மார்ச் 2015 (17:16 IST)

ஜனதா கட்சி பயணித்தப் பாதையில் ஆம் ஆத்மி கட்சி பயணிக்கிறது - உத்தவ் தாக்கரே

அவசரநிலை காலத்துக்குப் பிறகு, ஜனதா கட்சி பயணித்தப் பாதையில் தற்போது ஆம் ஆத்மி கட்சி பயணிக்கிறது என்று சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
 
இதுகுறித்து, சிவசேனை கட்சியின் பத்திரிகையான "சாம்னா'வில் செவ்வாய்கிழமை அவர் எழுதிய தலையங்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
 
பிரசாந்த் பூஷணும், யோகேந்திர யாதவும் அரவிந்த் கெஜ்ரிவாலை மனப்பூர்வமாக ஆதரித்தனர். அதேசமயம், கெஜ்ரிவால் செய்த தவறுகளையும் சுட்டிக்காட்ட இருவரும் தயங்கவில்லை. அதன் விளைவாக அவர்கள் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கெஜ்ரிவாலின் இந்த நடவடிக்கை கட்சியிலுள்ள பிறருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது.
 
அவசரநிலை காலத்துக்கு பிறகு, நடைபெற்ற 6 ஆவது மக்களவைத் தேர்தலில், இந்திரா காந்திக்கு எதிராக, சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்த ஜனதா கட்சி, அந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. மிகுந்த நம்பிக்கையுடன் மக்கள், ஜனதா கட்சி கூட்டணிக்கு வாக்களித்தனர். ஆனால், ஜனதா கட்சி, ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு, அதன் கூட்டணியிலிருந்த கட்சிகள் வெளியேறின. அதன் விளைவாக, அந்த ஆட்சி கவிழந்தது. அவசரநிலை காலத்துக்குப் பிறகு, ஜனதா கட்சி பயணித்தப் பாதையில் தற்போது ஆம் ஆத்மி கட்சி பயணிக்கிறது. பிற கட்சிகளுக்கும், ஆம் ஆத்மிக்கும் என்ன வித்தியாசம்? என்று உத்தவ் தாக்கரே கேள்வியெழுப்பி உள்ளார்.