Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கல்வி கட்டணம் செலுத்த தவறிய மாணவிகளின் சீருடைகளை அகற்றிய பள்ளி நிர்வாகம்

Last Modified: திங்கள், 19 ஜூன் 2017 (16:28 IST)

Widgets Magazine

பீகார் மாநிலத்தில் கல்வி கட்டணம் செலுத்த தவறிய மாணவிகளின் சீருடைகளை பள்ளி நிர்வாகத்தினர் அகற்றிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 
பீகார் மாநிலத்தில் பெகுசராய் என்ற பகுதியைச் சேர்ந்த ஜுன்ஜுன்ஷா என்பவர் தனது இரண்டு மகள்களையும் தனியார் பள்ளி ஒன்றில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். அவர் இந்த மாதம் செலுத்த வேண்டிய பள்ளி கட்டணத்தை செலுத்தவில்லை. 
 
மாலை ஜுன்ஜுன்ஷா தனது மகள்களை அழைக்க பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளி நிர்வாகத்தினர், பள்ளி கட்டணத்தை செலுத்திவிட்டு மகள்களை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் எனக்கூறி அவர்களை வீட்டுக்கு அனுப்ப மறுத்துள்ளனர். தன்னிடம் தற்போது பணம் இல்லை, சிறிது காலம் அவகாசம் கொடுங்கள் என்று ஜுன்ஜுன்ஷா கேட்டுள்ளார்.
 
இதற்கு மறுப்பு தெரிவித்த பள்ளி நிர்வாகத்தினர், பள்ளி கட்டணத்தை செலுத்தாவிட்டால் எங்கள் பள்ளி சீருடையை அணியக்கூடாது என கூறி சீருடைகளை அகற்றியுள்ளனர். ஜுன்ஜுன்ஷா வேறு வழியில்லாமல் அவரது மகள்களை அப்படியே வீட்டுக்கு அழைத்து சென்றார். இந்த காட்சிகளை சிலர் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். 
 
இதையடுத்து இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கல்வித்துறை உடனடியாக விசாரணை மேற்கொண்டது. பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியை ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் பள்ளி நிர்வாகம் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அசோக்சவுத்ரி தெரிவித்துள்ளார்.

 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

போயஸ் கார்டன் வீடு யாருக்கு சொந்தம்? - திவாகரன் மகன் பேட்டி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ்கார்டன் வீடு யாருக்கும் சொந்தம் என சசிகலாதான் ...

news

ஆஸ்திரேலியா செல்ல இனி ஆன்லைனில் விசா!!

ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இனி ஆன்லைன் ...

news

ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளர் அறிவிப்பு...

நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக ...

news

எல்லையை கடந்துச் சென்று பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுங்கள்: கம்பீர் கொந்தளிப்பு

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்த ஜம்மு - காஷ்மீர் ...

Widgets Magazine Widgets Magazine