வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 18 ஏப்ரல் 2015 (16:24 IST)

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் அமெரிக்காவில் திருமணம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆண் ஓரின சேர்க்கையாளர்கள் அமெரிக்காவில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
 
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில்தான் வசிக்கும் இந்திய வம்சாவளி இளைஞர்களான சந்தீப் மற்றும் கார்த்திக் இருவரும் இணையத்தளம் மூலம் அறிமுகமாகியுள்ளனர். பிறகு இருவருக்குமிடையே ஏற்பட்ட புரிந்துணர்வு, பிறகு அவர்களது பழக்கம் காதலாக மாறியுள்ளது.
 

 
சந்தீப் என்பவர் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். கார்த்திக் கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர். இதன்படி கேரளாவைச் சேர்ந்த சந்தீப் மற்றும் கார்த்திக் இருவரும் சேர்ந்து தங்களுடைய திருமணத்தை இந்திய பாரம்பரியத்தின்படி செய்துகொள்ள எண்ணியுள்ளனர்.
 
இதையடுத்து கலிபோர்னியாவில் திருமண அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர்கள், நண்பர்கள் அனைவரது முன்னிலையிலும் இவர்களது திருமணம் செய்ய முடிவு செய்யப்ப்பட்டது. அதனால் இந்து பாரம்பரிய பழக்கவழக்கங்களின்படி சந்தீப் மற்றும் கார்த்திக் திருமணம் நடந்தேறியது.
 
இது குறித்து கூறிய இந்த ஜோடியின் நண்பர்கள், “சந்தீப் மற்று கார்த்திக் இருவரும் முன்னோடிகளாக இருக்க விரும்பினர். அவர்கள் தங்களது அனைத்து தடைகளையும் உடைத்தெறிய விரும்பினர். இந்த புதிய நிகழ்வு மற்றவர்களுக்கும் உதவிகரமாக அமையும்” என்றனர்.