1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 29 ஆகஸ்ட் 2015 (01:22 IST)

அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இந்தியாவில் லாரிகள் வேலை நிறுத்தம்

அக்டோபர் 1 ஆம் தேதி முதல், இந்தியா முழுமைக்கும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
 

 
இது குறித்து, அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் பிம் வாத்வா கூறியதாவது:-
 
நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டணங்களை முறைப்படுத்தக் கோரியும், சுங்க கட்டணத்தை ஒரே தவணையாக செலுத்தும் முறைக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் தொடர்ந்து போராடி வருகின்றோம்.
 
எங்களது நியாயமான கோரிக்கைகள் குறித்து, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். எங்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் போக்குவரத்து துறை அமைச்சகம் தோல்வி அடைந்துவிட்டது.
 
எனவே, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் முடிவு செய்துள்ளது என்றார்.
 
காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக அத்திவாசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஒரு நாளைக்கு சுமார் 1500-1700 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.