’அந்த இரண்டு கட்சிகளும் ’ ஊழல் கட்சிகள் - யெச்சூரி பேச்சு

yechury
Last Modified செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (18:26 IST)
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சிட்பண்ட் விவகாரத்தில் திருணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டும்   ஊழல் கட்சிகள் என, தெரிய வந்துள்ளது என சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் சிட்பண்ட் விசாரணைக்காக கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ்குமார் வீட்டுக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்./ பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
 
இதனையடுத்து ராஜிவ்வின் வீட்டுக்கு சென்ற மம்தா பாணர்ஜி மத்திர அரசை கண்டித்து தர்ணா போராட்டத்தை நடத்தினார்.
 
பின்னர் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவில் ராஜிவிடம் கட்டாய வாகுமூலம் பெறக் கூடாது. கைது செய்யக்கூடாது என்றும் விசாரனைக்கு ராஜிவ் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறியது.
 
இதுகுறித்து மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாரான் யெச்சூரி கூறியதாவது:
 
மாநில அரசின் அதிகாரத்தின் மீது தாக்குதல் நடத்தக் கூடாது. நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ மேற்கொள்ளும் விசாரணை இது. மேலும் ஊழல் கட்சிகளான் திரிணாமுல் மற்றும் பாஜாக ஆகியவற்றை சுப்ரீம் கோர்ட் உரிய இடத்தில் வைத்துள்ளது. சில ஊழல்வாதிகளை வெளிக்கொண்டு வர் ஏன் பாஜக 5 வருடம் காத்திருந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :