Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

70 கி.மீ வேகத்தில் வந்த ரெயிலை நிறுத்திய டிரைவர்: உயிர் தப்பிய பெண் (வீடியோ)


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (19:15 IST)
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி மும்பையில் 70 கி.மீ வேகத்தில் வந்த புறநகர் ரெயிலை ஓட்டுநர் சாமர்த்தியமாக நிறுத்தியதால், தண்டவாளத்தில் நடந்து சென்ற 50 வயது பெண் ஒருவர் உயிர் தப்பினார்.
 
> > மும்பையின் சர்ச்கேட் பகுதிக்கு செல்லும் புறநகர் ரெயில் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி நள்ளிரவில் சர்னிரோடு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது 50 வயது பெண் ஒருவர் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். இதைக்கண்ட ஓட்டுநர் எச்சரிக்கை ஒலி எழுப்பியுள்ளார்.
ஆனால் அந்த பெண் அதைக் கவணிக்காமல் தொடர்ந்து ரெயில் தண்டவாளத்திலே நடந்துச் சென்றார். உடனே ஓடுநர் பிரேக்கை அழுத்தி சாமர்த்தியமாக ரெயிலை நிறுத்தினார். 70 கி.மீ வேகத்தில் வந்த ரெயில் நிறுத்தப்பட்டது. அந்த பெண் சிறிது இடைவெளியில் உயிர் தப்பினார்.

இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


நன்றி: Steffan 4578

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :