Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டு கான்பூரில் விபத்து

புதன், 28 டிசம்பர் 2016 (10:49 IST)

Widgets Magazine

அஜ்மீர் - சால்டா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ரூரா பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது.


 
 
அஜ்மீர் - சால்டா எக்ஸ்பிரஸ் ரயில் கான்பூரில் இன்று காலை தடம் புரண்டது. இந்த விபத்து 2 பேர் பலியாகியுள்ளனர், 40 பேர் காயம் அடைந்துள்ளனர் என செய்திகள் வெளிவந்துள்ளது.
 
விபத்தில் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தால் கான்பூர் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
 
மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயணிகளை மீட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
முன்னதாக கடந்த மாதம் 21ம் தேதி இந்தூர் - பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 150 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

திமுக உடைந்து கலைஞர் திமுக உருவாகும் அபாயம்: அதிர்ச்சியில் தொண்டர்கள்!

தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் திராவிட கட்சிகளான அதிமுக, திமுகவிற்கு இது சோதனை காலம் ...

news

ஜெயலலிதா சமாதிக்கு சென்ற பெண்ணின் நிலமை ஐயோ பரிதாபம்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மாரணமடைந்தார். அவரது உடல் சென்னை மெரினா ...

news

மௌனம் கலைத்த சசிகலா: முதன் முதலாக ஊடகத்திற்கு பேட்டி!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தான் அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக வர ...

news

ராம மோகன் ராவுக்கு ஆதரவளிக்கும் திருநாவுக்கரசர்!

ஜெயலலிதா இருந்திருந்தால் அவருக்கு தகவல் தெரிவிக்காமல் தலைமைச் செயலகத்திற்குள் சோதனை ...

Widgets Magazine Widgets Magazine