ரயில் தடம் புரண்டு விபத்து - 12 பேர் படுகாயம்

acc
Last Updated: ஞாயிறு, 15 ஏப்ரல் 2018 (11:36 IST)
மத்திய பிரதேசத்தில் ரயில் தடம்புரண்ட விபத்தில் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் கட்னி - சோபான் பயணிகள் ரயில், நேற்று இரவு கட்னியில் இருந்து  புறப்பட்டு சென்றது. ரயில் புறப்பட்ட சில மணித்துளிகளில்  சல்க்னா-பிபாரியாகலா என்ற இடத்தில் ரயிலின் ஐந்து பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. இதனால் பயணிகள் அலறியடியடித்துக் கொண்டு ரயிலில் இருந்து வெளியேறினர்.
cry
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :