Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்து அல்லாதவர்கள் வேலையில் இருந்து நீக்கமா? திருப்பதி தேவஸ்தானம் அதிரடி

Last Modified புதன், 31 ஜனவரி 2018 (23:14 IST)
சமீபத்தில் திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தேவஸ்தானம் கொடுத்த காரில் சர்ச்சுக்கு சென்றுவந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. இதனையடுத்து இந்து அல்லாதவர்களை வேலையில் இருந்து ஏன் நீக்கப்படக்கூடாது என்று விளக்கம் கேட்டு 44 பேர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது: உங்களுடைய சர்வீஸ் ஆவணங்களை சரிபார்த்ததில் நீங்கள் கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இது தேவஸ்தான விதிமுறைகளுக்கு சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. உங்களுடைய நியமனம் ஏற்புடையது அல்ல. உங்களுடைய நியமனம் ஏற்புடையதாக இல்லாத நிலையில், உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்”

இந்த நோட்டீசுக்கு பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் சரியான விளக்கம் அளிக்கவில்லை என்றால் 44 ஊழியர்களும் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :