Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

திருப்பதி தேவஸ்தான கணினியில் வைரஸ் தாக்குதல்!!


Sugapriya Prakash| Last Modified புதன், 17 மே 2017 (12:02 IST)
திருப்பதி தேவஸ்தானத்தின் கணினிகள் ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு, இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. 

 
 
உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதல் கம்ப்யூட்டர்களைப் பதம் பார்த்து வருகின்றன. இதற்கு ஹேக்கர்களே காரணம். பணம் பறிக்கும் நோக்கில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த வைரஸால் 99 நாடுகளில், கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 
 
இந்நிலையில் ஆந்திர மாநில காவல்துறையின் கம்ப்யூட்டர்களை இது தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஏடிஎம் சேவைகளும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
அதோடு இல்லாமல், நிர்வாக அலுவலகத்தில் உள்ள 10 கணினிகளில் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு, கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :