வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 11 நவம்பர் 2015 (02:54 IST)

விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி படுகொலை: பிரவீன் தொகாடியா கடும் கண்டனம்

திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா கலவரத்தில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகி புட்டப்பா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிரவீன் தொகாடியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

 
விடுதலைப் போராட்ட வீரராக திப்பு சுல்தான் திகழ்ந்துள்ளதாக கூறி, அவரது பிறந்த நாளை கர்நாடக அரசு விழாவாக கொண்டாடி வருகிறது.
 
ஆனால், திப்பு சுல்தான் ஹிந்து மக்களுக்கு எதிராக செயல்பட்டார் என கூறி, இந்த விழாவுக்கு ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவின் மடிகேரி பகுதியில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் கண்டனப் பேரணி நடைபெற்றது.
 
இதற்கு, திப்பு சுல்தான் ஆதரவு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சிறிது நேரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது.
 
இதில், ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகி புட்டப்பா பலியானார். மேலும், கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய தடியடியில் பலர் காயமடைந்தனர்.
 
இது குறித்து, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் பிரவீன் தொகாடியா வெளியிட்டுள்ள அறிக்கையில்:-கர்நாடகாவில் மைசூர் நகரை ஆட்சி செய்த திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. ஆனால், திப்பு சுல்தான் இந்த நாட்டின் வளர்ச்சி மற்றும் மதசார்பின்மைக்கு உரிய நபராக ஆட்சி செய்யவில்லை. இதனால்தான் இதற்கான எதிர்ப்பை பதிவு செய்ய அமைதியான முறையில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.
 
ஆனால், அமைதியாக போராட்டம் நடத்திய நிலையில், ஒருவர் கொடூர முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். இது போன்ற மத சகிப்பு தன்மை இல்லாத செயல்களில் இருந்து இந்துக்களை நிச்சயம் பாதுகாக்க வேண்டும். அதற்கான கடமை எங்களுக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.