வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : வெள்ளி, 20 ஜனவரி 2017 (13:07 IST)

ஜல்லிக்கட்டு நடத்த 43 சதவீதம் எதிர்ப்பு: அதிர்ச்சியளிக்கும் கருத்துக்கணிப்பு!

ஜல்லிக்கட்டு நடத்த 43 சதவீதம் எதிர்ப்பு: அதிர்ச்சியளிக்கும் கருத்துக்கணிப்பு!

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் வலுத்து வருகிறது. ஒட்டுமொத்த தமிழகமும் ஒரே கோஷமாய் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் வரை போராட்டம் ஓயாது என உலகுக்கு உரக்க சொல்லி வருகின்றனர்.


 
 
ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பில் 57 சதவீத மக்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், 43 சதவீத மக்கள் ஜல்லிக்கட்டுக்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர்.
 
தமிழகத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் என கூறி ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என தமிழக மக்கள் கூறி வருகின்றன. பிரச்சனை தமிழகத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டுமானால் தமிழகத்தில் மட்டும் நடத்தப்பட்டிருக்க வேண்டும் ஏனென்றால் ஜல்லிக்கட்டு தமிழர்களின் கோரிக்கை.
 
ஆனால் டைம்ஸ் ஆப் இந்தியா நாடு தழுவிய அளவில் இணையதளத்தில் கருத்துக் கணிப்பை நடத்தி வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு எதிராக மக்கள் உள்ளார்கள் என்பதை காட்ட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் தான் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது என தமிழக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
 
அதாவது தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என தமிழகத்தில் தானே கருத்துக்கணிப்பு நடத்த முடியும், அதை விட்டுவிட்டு நாடுதழுவிய அளவில் நடத்தினால் எப்படி உண்மையான கருத்துக்கணிப்பு முடிவு கிடைக்கும் என டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் இந்த கருத்துக்கணிப்பை தமிழக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர். இது தேவையற்ற ஒரு கருத்துக்கணிப்பு என்றும் கூறுகின்றனர்.