Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வமி மீது திருட்டு பட்டம் கட்டிய டைம்ஸ் நெள


sivalingam| Last Modified வியாழன், 18 மே 2017 (05:00 IST)
டைம்ஸ் நெள தொலைக்காட்சியில் பணிபுரிந்த அர்னாப் கோஸ்வாமி சமீபத்தில் ரிபப்ளிக் டிவி என்ற பெயரில் சொந்தமாக டிவி சேனல் ஒன்றை ஆரம்பித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.


 


முதல் நாள் லாலு பிரசாத யாதவ், இரண்டாவது நாள் அரவிந்த் கெஜ்ரிவால், மூன்றாவது நாள் சசிதரூர் என ஒவ்வொரு நாளும் பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தும் செய்திகளை ஒளிபரப்பி வந்தது. இந்த நிலையில் மே 8ஆம் தேதி சசி தரூரின் மனைவியான மறைந்த சுனந்தா புஷ்கர் மற்றும் அவரின் வீட்டு வேலைக்காரர் ஆகியோருக்கு இடையே நடந்த உரையாடல் பதிவையும் ரிபப்ளிக் தொலைக்காட்சி வெளியிட்டது. இந்த உரையாடல் பதிவு, அர்னாப் கோஸ்வாமி மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் டைம்ஸ் நெள டிவியில் பணிபுரியும்போது பதிவு செய்யப்பட்டது என்றும், அர்னாப் மற்றும் ஸ்ரீதேவி டைம்ஸ் நவ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த பதிவுகளை யாருடைய அனுமதியும் பெறாமல் தங்களுடைய ரிபப்ளிக் தொலைக்காட்சியில் பயன்படுத்தியுள்ளதாகவும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளது.

இதற்கு பதிலளித்த அர்னாப், நானும் நிருபர் ஸ்ரீதேவியும் செய்தியை சேகரிக்க பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றோம். ஆனால் டைம்ஸ் நெள டிவி,  செய்தியை காவல்நிலையத்தில் சேகரித்து கொண்டிருக்கின்றது என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :