வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 26 ஜூன் 2020 (19:57 IST)

16 வயது பள்ளி மாணவி தற்கொலை: டிக்டாக்கில் பிரபலமானதால் வந்த வினை

டிக் டாக் என்பது தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலமாகியுள்ளது என்பதும், ஒருசிலர் டிக்டாக் செயலிக்கு அடிமையாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி ஒருவர் டிக்டாக்கில் பிரபலமாக இருந்த நிலையில் திடீரென அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
டெல்லியை சேர்ந்த பள்ளி மாணவி சியா கக்கர். இவர் டிக்டாக்கில் சுமார் 10 லட்சத்துக்கும் மேலான ஃபாலோயர்களை வைத்துள்ளார். வித விதமான நடனங்கள் ஆடி அதுகுறித்த வீடியோக்களை சியா கக்கர் பதிவு செய்து வந்தார். இவரது வீடியோக்களுக்கு இலட்சக்கணக்கில் லைக்ஸ்கள் கிடைக்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் டிக் டாக் பிரபலம் சியா கக்கர்  தன்னுடைய வீட்டில் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக வெளி வந்த தகவலை அடுத்து போலீசார் விரைந்து அவருடைய வீட்டுக்குச் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது குறித்த முதல் கட்ட விசாரணையில் டிக் டாக் பிரபலமாக இருக்கும் சியா கக்கருக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் வந்ததாகவும் இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிகிறது 
 
இதனை அடுத்து அவருக்கு மொபைல் போனில் பேசிய நபர் யார் என்பதை கண்டுபிடிக்க அவரது மொபைல் போனை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 16 வயது பள்ளி மாணவி டிக்டாக்கில் அடிமையானதால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது