வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (05:42 IST)

தேசியகீதம் பாடும்போது எழுந்து நிற்காத காஷ்மீர் மாணவர்கள் கைது!

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி திரையரங்குகளில் தேசியகீதம் ஒலிக்க வேண்டும் என்றும், அப்போது மாற்றுத்திறனாளிகள் தவிர அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதன்படி இந்த நடைமுறை அனைத்து திரையரங்குகளிலும் கடைபிடிக்கப்படுகிறாது.



 
 
இந்த நிலையில் நேற்றுமுன் தினம் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஐதராபாத் நகரில் உள்ள ஒரு திரையரங்கில் தேசியகீதம் ஒலிக்கும்போது அவமரியாதை செய்யும் வகையில் எழுந்து நிற்காததால் அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர். 
 
 ஓமர் பியாஸ் லுனே, முடாபிர் ஷபிர் மற்றும் ஜமீல்  குல் என்ற மூன்று இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.